கட்டிட கலை தொடர்பான அனைத்து தொழில் நுட்பங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பான அவனி ரீச் 24 எனும் கட்டிட கலை கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது…
கட்டுமான துறையில் கட்டிடங்களை தாண்டி கட்டிட கலை எனும் தொழில் நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்நிலையில் இந்த துறையில் உள்ள நவீன தொழில் நுட்பம்,வேலை வாய்ப்புகள்,இது சார்ந்த மேற்படிப்புகள் என கட்டிடகலை துறை சார்ந்த அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கோவை அவினாசி சாலை சிட்ரா அரங்கில் அவனி ரீச் 24 எனும் கட்டிடகலை கண்காட்சி நடைபெற உள்ளது.
கோழிக்கோட்டில் உள்ள அவனி டிசைன் கல்லூரி சார்பாக நடைபெற உள்ள இந்த கண்காட்சி குறித்து கட்டிடகலை நிபுணர்கள் மற்றும் துறை தலைவர்கள் சாம் சார்லஸ் தேவானந்த்,காட்வின் இம்மானுவேல்,ஓபிலியா வினோதினி மற்றும் அன்சு ஜார்ஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..
டிசைன் ஆர்வலர்களுக்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்த கண்காட்சி நடைபெறுவதாகவும்,கலை, கட்டிடக்கலை மற்றும் பல படைப்புத் துறைகளின் நுணுக்கங்களை ஒரே கூரையின் கீழ் தெரிந்து கொள்ளலாம் என கூறினர்..
அவனி ரீச்’24 இன் முக்கிய பகுதிகளாக, நிபுணர் பேச்சுக்கள், கேள்வி-பதில் அமர்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவர்கள் கலை, கட்டிடக்கலை மற்றும் பல ஆக்கப்பூர்வமான துறைகள் பற்றி அறிந்துகொள்ளச் செய்வதும், அவர்களிடையே ஒரு கல்வி ஆர்வத்தை உருவாக்குவதுமே ஆகும்.இதில்,மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து வடிவமைப்பு ஆர்வலர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றுப் பயனடைய கேட்டி கொள்வதாகவும், இந்நிகழ்வில் பங்கேற்பதற்கு பதிவுக் கட்டணம் எதுவும் இல்லை.என தெரிவித்தனர்…