காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஜெயராமன்,
புண்ணியக்கோட்டி, நாராயணன்
இதில் ஜெயராமன் மற்றும் நாராயணன் ஆகிய இரு உதவி ஆய்வாளர்களும் 1986 முதல் 38 ஆண்டுகள் காவல் பணியை செய்துள்ளார்
புண்ணியகோட்டி 1985 முதல் 39 ஆண்டுகள் காவல் பணி புரிந்து வந்தனர்
இந்நிலையில் 3 காவல் உதவி ஆய்வாளர்களுக்கும் ஒரகடம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
இதில் ஸ்ரீபெரும்புதூர் கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் உதயகுமார் IPS கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஒரகடம் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று ஓய்வு பெறும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்