வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், தேய்பிறை அஷ்டமி பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பைரவருக்கு பால், சந்தனம் மற்றும் மஞ்சள் தூள், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.
பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.