வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்றுடன் பணி ஓய்வு பெற உள்ள காவல் துறையினருக்கு பணி நிறைவு பாராட்டு விழா.
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து இன்று 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள பழனி போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன், வத்தலகுண்டு போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாகேஸ்வரன், நத்தம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பூபதி, இடையகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடாஜலபதி, கீரனூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மணிகண்டன், திண்டுக்கல் சரகம் (காவல்துறை) தலைமை நிருபர் ராஜகோபால், கொடைக்கானல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், கன்னிவாடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், அம்மையநாயக்கனூர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கருப்பையா, பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் காசிராஜன், தாடிக்கொம்பு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் சுப்பிரமணியன், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் குருசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சம்பூரணம் ஆகியோரை ADSP வினோஜி நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து, பணி நிறைவு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.