பாலஸ்தீனில் ரஃபா நகரில் கொடூரமான தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீன் மக்களை உலக நாடுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், போர் குற்றங்களை புரியும் அடாவடி இஸ்ரேல் மீது தடை விதிக்கவும், இஸ்ரேல் உடனான இந்தியாவின் உறவை முறிக்க வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
அதனடிப்படையில் கட்சியின் தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கட்சியின் தெற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் சிராஜூதீன் வரவேற்று பேசினார்.
மேலும் கட்சியின் மாநில செயலாளர் முஜிபுர் ரகுமான், மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிஸ்மில்லாஹ்கான், எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பிலாலுதீன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்நிகழ்வில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடக்கு ,தெற்கு மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ,தொகுதி நிர்வாகிகள் மற்றும் மதுரை முஸ்லிம் முக்கிய ஜமாத் தலைவர் ,செயலாளர், இமாம்கள், ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இறுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியில் வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.