மனித வாழ்வுக்கு தேவையான பணியில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம்

திருத்துறைப்பூண்டி கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் புகழாரம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகில்

ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பாக, உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இன்று மரம் நடும் விழா நடைப்பெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்கள் “காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அரசாங்கம் ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் இந்தாண்டு 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்த ஆண்டு 5,40,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிறுத்த ஷெட்டில் நடைப்பெற்றது. நகர மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்ற இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் மரக்கன்றுகளை நட்டும், விவசாயிகளுக்கு வழங்கியும் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து பேசுகையில் “திருவாரூர் மாவட்டத்தில் காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை பல்வேறு இடங்களில் நட்டு இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்கள். அதேபோல் பல்வேறு விவசாயிகளை சந்தித்தும் இந்த மரக்கன்றுகளை வழங்கி இருக்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒரு பேருக்காக மரக் கன்றுகள் வழங்கும் இயக்கமாக இல்லை, நான் நேரடியாக கவனித்த போது எந்த விவசாயிக்கு மரக்கன்றுகள் தேவையோ, அந்த விவசாயிகளிடம் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்து, அவர்களின் மண் வளம் தண்ணீர்த் தேவை இதை முழுமையாக அறிந்து கன்றுகள் கொடுக்கப்படுகின்றன.

மனித வாழ்வுக்கு தேவையான இந்த மரக் கன்றுகள் நடும் பணியில் ஈஷா இயக்கம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் இதில் பங்கு எடுத்து இருக்கிறார்கள். அதுவும் நம்முடைய திருவாரூர் மாவட்டத்திலும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்த காவேரி கூக்குரல் இயக்கம் மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுக்கு முழுவதுமாக ஆதரவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் நாங்கள் பங்கெடுப்பதை பெருமையாக கருதுகிறோம்” எனக் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *