தேனி மாவட்டம்
உடல் உறுப்புகளை தானம் செய்த அழகு முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடல் உறுப்புகளை தானம் செய்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட பச்சையப்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகு முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் அவர்கள் இன்று 31.05.2024 வெள்ளிக்கிழமை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தங்கம்மாள்புரம் ஊராட்சிக்குட்பட்ட பச்சையப்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்த .அழகுமுத்து (43) த/பெ.ராமமூப்பர் என்பவருக்கு கடந்த 28.05.2024 அன்று வாகன விபத்து ஏற்பட்டது. உடனடியாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 30.05.2024 சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அழகுமுத்துவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக மனைவி முத்துமாரி அவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த அழகுமுத்துவின் இதயம், 2 கண், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று உடல் உறுப்புகளை தானம் செய்த ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அழகு முத்துவின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.