பழங்குடியினர் வெளி நாட்டில் பி.எசடி படிக்க கல்வி உதவித்தொகை-தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் பிஎச்டி படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பைத் வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினர் மாணாக்கர்கள் https overseastribalgov.in மூலம் இணையவழியில் விண்ணபிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 31.05.2024 மேலும் விவரங்களுக்கு https://overseas.tribal.gov.in. அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *