தென்காசி நகராட்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்போம்! துணிப்பையை கையில் எடுப்போம்! உள்ளிட்ட
முழக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும், நகராட்சிகளின் திருநெல்வேலி நிர்வாக மண்டல இயக்குனரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசணையின் பேரிலும் தென்காசி நகராட்சி பகுதியில் காசிவிஸ்வநாதர் கோவில் முன்பு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்து துணிப்பையை கையில் எடுத்து மாசற்ற தமிழ்நாடு படைப்போம் என்ற உறுதிமொழியுடன் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோரிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணிப்பைகளை பொதுமக்களுக்கு இலவச
வழங்கி தென்காசி பிராணா மரம் வளர்ப்பு இயக்கம் மற்றும் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண் கல்லூரியின் (இறுதிஆண்டு) மாணவிகள் தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில்
சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன் மகேஷ்வரன் துப்புரவுபணி மேற்பார்வை யாளர்கள்
டிபிசி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் மற்றும் பரப்புரையாளர்கள் , ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இயக்கத்தை தொடர்ந்து நடத்தி தென்காசி நகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் இல்லாமல் ஆக்க வேண்டும் என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் குறிப்பாக மொத்த வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள், பூக்கடை வியாபாரிகள், இறைச்சி ,மீன் கடை வியாபாரிகள் இதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. துணிப்பையை கையில் எடுப்போம்!தூய்மையான தமிழகம் படைப்போம்!! மஞ்சப்பையை கையில் எடுப்போம்! மாசற்ற தமிழ்நாடு படைப்போம்!!
என் தென்காசி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.