தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் ரத்னா ஆங்கிலப் பள்ளி, கடையநல்லூரில் வைத்து நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெளியீடு உப குழு பொறுப்பாளர் ஐயப்பன் வரவேற்புரையாற்றினார் . சோனியா – பிரியதர்சினி அறிவியல் பாடல் பாடினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார் செயலறிக்கை வாசித்தார். மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவியலும் சமுதாயமும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். சங்கரன்கோவில் கிளை செயலாளர் பால்ராஜ் அறிவியல் இயக்கம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தார். கல்வி உபகுழு பொறுப்பாளராக தலைமை ஆசிரியர் ராமர் – எழுத்தாளர் இளங்கோ கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் சமம் பொறுப்பாளர்களாக ஆசிரியர் ஜெயகணேஷ் – சத்யா தேர்வு செய்யப்பட்டனர். துளிர் இல்ல பொறுப்பாளர்களாக ராஜேந்திரனும் – ஆசிரியர் சேக் ஒலி வாவா வும் -ஆரோக்கிய இயக்க பொறுப்பாளராக ராமையா – கண்மணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சூழலியல் உபகுழு பொறுப்பாளராக குருவிகுளம் செயலாளர் செல்வின் – சங்கீதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இச்செயற்குழுவில்
கீழ்க்கண்ட தீர்மானங்களை கடையநல்லூர் கிளை செயலாளர் ஆசிரியர் ராஜ்சுதாஸ் வாசித்தார்
சுற்றுச் சூழலை பாதிக்கும் காரணிகள் குறித்து மாவட்ட அளவில் கள ஆய்வு செய்வது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே மது – போதை பழக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் தீர்வு குறித்த ஆய்வு
கனிம வளங்கள் வரம்பு மீறி பயன்படுத்தப்படுகிறதா என்ற ஆய்வு. 14 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இரத்த சோகை பரிசோதனை செய்வது
ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடத்துவது
100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகளையும், அரசு பொதுத்தேர்வில் சிகரம் தொட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாராட்டுவது.
மக்கள் ஒற்றுமைக்கான சமூகஅறிவியல் திருவிழாக்களை அனைத்து கிராமங்களிலும் நடத்துவது போன்ற எதிர்கால செயல் திட்டங்களை கடையநல்லூர் செயலாளர் ஆசிரியர் ராஜ்சுதாஸ் வாசித்தார்.
அனைவரது ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில்
பொருளாளர் தங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார்.