சின்னமனூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சீப்பாலக்கோட்டை கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய புகையிலைப் பொருட்கள் விற்பனை மும் முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த தகவலின் பெயரில் சீப்பாலக்கோட்டை பிரதான ரோட்டில் கடை வைத்து புகையிலைப் பொருட்களை பொது மக்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கடை
உரிமையாளர்கள் துரைராஜ் செல்வநாயகம் ஆகியோரின் இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுரேஷ் கண்ணன் ஓடைப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி ஆகியோர் கடைகளை பூட்டி சீல் வைத்தும் நோட்டீஸ் வழங்கினார்கள்
மேலும் இரண்டு கடைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூல் செய்யப்பட்டது இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பெயரளவுக்கு எப்பவாவது ஒருமுறை இந்த மாதிரி சோதனை செய்து கடைக்காரர் களுக்கு அபராதம் விதிக்கப் படுவது போல் இல்லாமல் சின்னமனூர் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது
குறிப்பாக சீப்பாலக்கோட்டை கிராமத்தில் மீண்டும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை எத்தனையோ கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது இதனை முறையாக ஆய்வு செய்து அந்த கடைகளுக்கும் அபராதம் விதித்து சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுபோன்று முறையான நடவடிக்கையால் தான் புகையிலைபொருட்கள் விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியும்
இதுபோன்று தொடர்ந்து நடவடிக்கை எடுத்தால் தான் பொதுமக்கள் சுகாதாரமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.