கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-வாக்கு எண்ணிக்கை, கிருஷ்ணகிரி அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் நடைப்பெறவுள்ளதையடுத்து, முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (31.05.2024) அன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) பி.புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப. உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.