செய்தியாளர் மணிகண்டன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன், 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும் இதுகுறித்து சிங்காரப்பேட்டை மிட்டபள்ளி உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பொதுமக்கள் புகார்கள் கூறி வந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் ரோந்து சென்ற சிங்காரப்பேட்டை போலீசார் வாட்ஸ் அப் மூலம் மூணு நம்பர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த சண்முகம் என்பவர் மகன் சுரேஷ் (31) மற்றும் சிங்காரப்பேட்டை சார்ந்த பாபு என்பவர் மகன் பயாஸ் (31) ஆகிய இருவரையும் கைது செய்து நேற்று ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.