உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,,கோவையில் ஷம்யுக்தா கிரியேஷன்ஸ் ஒருங்கிணைத்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31ம்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி உலக புகையிலை ஒழிப்பு தினத்தை. முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது அதன் ஒரு பகுதியாக ஷம்யுக்தா கிரியேஷன்ஸ் சார்பாக அதன் இயக்குனரும் மாணவியுமான ஆர்.சி.ஷம்யுக்தா ஒருங்கிணைத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மாவட்ட. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து நடைபெற்ற இதில், நர்சிங் கல்லூரி மாணவிகள் புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.. முன்னதாக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் புகையிலை ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் புகையிலை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்று பேரணி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சர்மிளா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் சரண்யா,முரளி,தௌபீக்,
சி.எப்.டபிள்.யூ பவுண்டேஷன் ஃபாசில் ஆகியோர் கலந்து கொண்டனர்..
இதில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் புகையிலை கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு புகையிலை ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் புகையிலையால் ஏற்படும் தீமைகள் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்தும் முழக்கமிட்டபடி ஊர்வலமாக சென்றனர்..