திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பேயாலம்பட்டு பகுதியில் உள்ள கருமாரியம்மன்
கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போய்விட்டதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.
செங்கம் அடுத்த பேயாலம்பட்டு பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவில் உள்ளது தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து வழிபட்டு செல்லக்கூடிய சிறப்பு பெற்ற கோவிலாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பால்குடம் எடுத்து வரும் விழா சிறப்புபெற்றது.
சிறப்புகள் மிக்க இக்கோவிலின் உள்ளே உண்டியல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு இந்த உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கிராம பொதுமக்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர். அதன்படி செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையில போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேயாலம்பட்டு கிராமத்தில் பரபரப்பு காணப்பட்டு வருகிறது