மதுபான கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் ஜன்னல் கம்பியை உடைத்து விலை உயர்ந்த மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நம்பர்கள்
சென்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியில் அரசு மதுபான கடை ஏங்கி வருகின்றது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இயங்கி வரும் இந்த மதுபான கடையில் ஜன்னல் கம்பியை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இறங்கி உள்ளே இருந்த 250 ரூபாய்க்கு மேலே உள்ள மது பாட்டில்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்
இன்று மதியம் வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மதுபான கடை ஊழியர்கள் செங்கம் போலீசருக்கு தகவல் அளித்துள்ளனர் முதற்கட்டமாக சுமார் 600 மது பாட்டில்கள் திருடப்பட்டு உள்ளதாகவும் சிசிடிவி கேமராக்கள் இயங்கிய ஹார்ட் டிஸ்க் பெட்டியை உடைத்து ஹார்ட் டிஸ்கை திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
திருட்டு சம்பவம் தொடர்பாக செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.