கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை அத்திவரதரை போல் கிணற்றிலிருந்து செல்லியம்மன் சாமி உதிரை வேங்கை மரத்திலான சிலையை எடுக்கும் திருவிழா நேற்று நடைபெற்றது சென்ற வாரம் காப்பு கட்டி தொடங்கிய திருவிழாவின் முக்கிய அம்ச நிகழ்வாக கிணற்றிலிருந்து சாமி எடுத்தில் விழா இன்று விமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது மேள தாளங்கள் முழங்க கோவில் பூசாரி ஊர்வலமாக வந்து சுமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி செல்லியம்மன் சிலையை குழந்தை போல் மார்பில் அனைத்தவாறு மேலே எடுத்து வந்தார் இதனைக் கண்ட பக்தர்கள் பொதுமக்கள் பலத்த உற்சாகத்துடன் கோஷமிட்டனர் மேலும் எடுக்கப்பட்ட சுவாமி சிலை அலங்கரிக்கப்பட்டுஇரவு முழுவதும் சிங்க வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து பின்னர் இன்று வியாழக்கிழமை 12 மணி அளவில் பழமை வாய்ந்த தேரில் வீதி உலா நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு செல்லியம்மன் செல்லியம்மன் என்ற கோஷமுழக்கங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் இரண்டு பகல் ஒரு இரவு மட்டுமே பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் காட்சியளிப்பார் என்பதும் சிறப்பம்சமாகும் தேர் திருவிழா முடிந்து இரவு 7.00மணி அளவில் மீண்டும் செல்லியம்மனை கிணற்றுக்குள் குழந்தையைப் போல் அனைத்து கொண்டு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு கிணற்றிலிருந்து தீர்த்தத் தண்ணீர் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கிணற்றை தெய்வமாக வழிபட்டு வருவார் இந்த திருவிழாவுக்கு சிறப்பு கூட்டும் விதமாக இந்த மருதூர் கிராமத்தில் இரு வெவ்வேறு சமுதாய மக்கள் இணைந்து இந்த திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்தி வருவது சமூக ஒற்றுமைக்கும் ஒரு சான்றாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *