வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாநகராட்சிக்கு குப்பைகளை கையாளும் நவீன இயந்திரம்.
திண்டுக்கல் மாநகராட்சி, பெஸ்கி கல்லூரி அருகில் உள்ள நுண் உர செயலாக்க மையத்தில் தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலமாக குப்பைகளை கையாளும் நவீன இயந்திரம் ரூ.21.24 லட்சத்தில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 5 முதல் 10 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளை கையாள முடியும். இதன் செயல்பாட்டை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். உதவி செயற்பொறியாளர், மாநகர் நல அலுவலர், தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.