வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகளை பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்.
திண்டுக்கல் ஒன்றியம், சீலப்பாடி ஊராட்சியில் உள்ள N.S.நகர் பேருந்து நிறுத்தம் அருகே சீலப்பாடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது குப்பையில் இருந்த ஒரு பையில் 2 உலோக சிலைகள் இருப்பதை கண்டறிந்து சீலப்பாடி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், சீலப்பாடி கிராம நிர்வாக அலுவலர் பால்பாண்டி மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் 2 உலோக சிலைகளை கைப்பற்றி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று வைப்பறையில் வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.