அந்தமானில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 33 தங்கம் 10 வெள்ளி எட்டு வெண்கலம் என்று அசத்திய யுத்த வர்ம போர்களை அகடாமி விளையாட்டு சங்கம் வீரர் வீராங்கனைகள் அசத்தல் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..
அந்தமானில் முதல்முறையாக நடைபெற்ற சிலம்ப போட்டியில் யுத்த வர்மா சிலம்ப போர் கலை அகடாமி விளையாட்டு சங்கம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.
தமிழகத்தின் பாரம்பரிய கலையான சிலம்பம் தற்போது உலக பிரசித்தி பெற்றுஉள்ளது. இந்நிலையில் சிலம்பப்போட்டியே நடைபெறாத அந்தமானில் முதல் முறையாக யூத் கேம் பெடரேஷன் ஆப் இந்தியா தேசிய செயளாலர் திரு u.விஜயன் மாநில தலைவர் R.சொந்தரராஜன் அவர்கள் முன்னிலையில் சிலம்ப ஆசான் சண்முகம் ஏற்பாட்டின் பேரில் சென்னை திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி விளையாட்டு சங்கம் இணைந்து கடந்த ஜுன் 2ம்தேதி அந்தமான் தமிழர் சங்கத்தில் நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க இந்தநிகழ்ச்சியில் இந்தியாவின் பல மாநிலங்களிருந்து சிலம்ப வீரர்கள் வீராங்கனைகள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் திருவொற்றியூர் யுத்த வர்ம சிலம்ப போர்கலை அகாடமி விளையாட்டு சங்கம் சிலம்ப வீரர்கள் வீராங்கனைகள் ஒற்றை சிலம்பம், இரட்டை சிலம்பம் ,சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் திறமையுடன் விளையாடி
33 தங்கபதக்கங்களையும்
10 வெள்ளி பதக்கங்களையும் 8 வெண்கல பதக்கங்களையும் சான்றிதழுடன் சாம்பியன் கோப்பையையும் வென்று சாதனை படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற சிலம்ப வீராங்கனைகளை சென்னை விமான நிலையத்தில் உறவினார்கள் வீர வீராங்கனைகளின் பெற்றோர்கள் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர்
தொடர்ந்து யுத்த வர்மா சிலம்ப பள்ளி சிலம்ப ஆசான் ஜெ குரு ஏழுமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அரசு மூன்று சதவீதம் இட ஒதுக்க கொடுத்துள்ளது என்றும் மேலும் எங்களுக்கு உதவிகள் செய்தால் மாணவ மாணவியர்கள் அனைவரும் நன்றாக வருவார்கள் என்றும் அனைத்து விளையாட்டு போட்டிகளுக்கும் கிடைக்கும் சலுகை இன்னும் சிலம்பத்திற்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு செய்து இருக்கிறார்களே தவிர அதற்கு உண்டான முறைப்படுத்தி இன்னும் தரவில்லை என்றும் தெரிவித்தார் மேலும் உடனடியாக அரசு முன்வந்து சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு அவர்களுக்கு தேவையான இட ஒதுக்கீடை முன்வந்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிலம்பம் வீரர் விஜேஷ் அந்தமானில் நடைபெற்ற இந்த போட்டியில் 33 தங்கப்பதக்கம் வென்று இருக்கிறோம் என்றும் மேலும் வெள்ளி மற்றும் வெண்கலம் என்று அசத்தியுள்ளோம் என்றும் தெரிவித்தார் மேலும் சிலம்பம் போட்டிகள் அதிக அளவு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நடத்த வேண்டும் என்றும் சிலம்பம் வீரர் விஜேஷ் அரசுக்கு கோரிக்கையையும் வைத்தார்
மேலும் சிலம்பம் வீரர்களுக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு எடுத்து வைத்திருக்கும் முதல் படி அதே போல இன்னும் பல பணிகளை எடுத்து வைக்க வேண்டும் என்று வீரர் தெரிவித்தார் .