திருவாரூரில்
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பசுமைப்படை இணைந்து பள்ளியில் மரக்கன்றுகள் மையத்தின் பெருந்தலைவர் ப.அழகிரிசாமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் இணைச்செயலாளர் ஆகியோர் முன்னினையில் வி எஸ் டி பள்ளிக்குழும தாளாளர் பாலசுப்ரமணியன் அவர்களால் நடப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளியில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் விஜய் TNCPERC இயக்குனர்கள் ரவிச்சந்திரன் மற்றும் தர்மதாஸ் செய்திருந்தனர்
பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நடனம் சுற்றுச்சூழல் உறுதிமொழியினை அனைவர் முன்னிலையில் வாசிக்க நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்
இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ் அமைப்புச்செயலாளர் போர பா.பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்