தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூன்-12. தமிழ் திரைப்பட கதாநாயகன் துரை.சுதாகர் தான் நடித்த திரைப்படத்தின் காட்சியை, எக்ஸ்தளத்தில் பயன்படுத்திய எலான் மஸ்க் நன்றி தெரிவித்துள்ளார்.
எக்ஸ்தளம், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனத்தை விமர்சித்து ஒரு புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளார். அந்த புகைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான "தப்பாட்டம் படத்தில்" ஒரு காட்சி. அந்த திரைப்படத்தில் தஞ்சை மாவட்டத்தை சார்ந்த துரை.சுதாகர் கதாநாயகனாகவும், நாயகி டோனா ரொசாலியோவும் இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிக்கும் போஸ்டராக இடம்பெற்றது. அந்த புகைப்படத்தை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பயன்படுத்தியிருந்தால் உலக அளவில் இன்று பேசப்படுகிறது.
இது குறித்து திரைப்பட நடிகர் துரை.சுதாகர் பேசும்போது 6-ஆண்டுகளுக்கு முன்பு மிக சிறிய பட்ஜெட்டில் உருவாக்கிய "தப்பாட்டம்" என்ற படம். அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பரவலாக பேசப்படவில்லை என்றாலும், குறைந்த முதலீடுக்கேற்ற ஒரு வெற்றியை கொடுத்தது. இந்த படம் வெளிவந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவ்வப்போது அந்த படக்காட்சியை வைத்து சமூக சூழலுக்கு ஏற்ப மீம்ஸாக வெளிவருவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த படக்காட்சியை எலன் மஸ்க் அவர்கள் தனது எஸ்தலத்தில் பதிந்துள்ளார்.
இவர் பதிந்த பின்பு உலக நாடுகளில் உள்ள எனக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவரும் தன்னிடம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவிப்பதாகவும். ஒரு தமிழன் நடித்த திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சி பலராலும் மீம்ஸ்சாக பயன்படுத்தப்பட்டு இன்று உலகத்தில் தொழில்துறையில் முக்கிய பங்காற்றி வரும் எலான் மஸ்க் பயன்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.
இந்த புகைப்படத்தை எலான் மஸ்க் அவர்கள் பகிர்ந்தாலும் அவரின் பார்வைக்கு ஊடக பயன்பாட்டாளர்களும், மீம்ஸ் உருவாக்குபவர்களும் கொண்டு சேர்த்துள்ளனர். இதன் மூலம் சமூக ஊடகங்கள் நினைத்தால் எந்த ஒரு செய்தியையும் உலக அளவில் கொண்டு சென்று மக்கள் மனதில் பதிய வைக்க முடியும் என்பது ஒரு உதாரணமாக தெரிகிறது.
இதை உலக அளவில் பரப்பிய சமூக ஊடகப் பதிவாளர்களுக்கு மற்றும் தன் எஸ்தலத்தில் பதிவிட்ட எலான் மஸ்க் அவர்களுக்கும், அந்தப் படத்தின் தனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருக்கு மகிழ்ச்சியும் நன்றி தெரிவித்தார்.