வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை பெறுவதற்கு தபால் நிலையங்களில் சிறப்பு முகாம்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்பட உள்ள 17-வது தவணையாக ரூபாய் 2000 உதவித்தொகை அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் வசதியை பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ரூ.2000 உதவித்தொகை அஞ்சலகங்கள் மூலம் பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது என திண்டுக்கல் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.