பட்டா வழங்க கோரி 200க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்! பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் ஆறு வீடுகள் மற்றும் இரண்டு கடைகள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி இந்த வீடுகளையும் 2 கடைகளையும் இடிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்து உத்தரவு உத்தரவு பெற்றுள்ளார்.

இதை அமல்படுத்தும் வகையில் வருவாய்த்துறையினர் ஆறு வீடு மற்றும் இரண்டு கடைகளுக்கு காலி செய்யுமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

இதனை கண்டித்து சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் தலைவர் கருப்பையா தலைமையில் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்ளே புகுந்து வட்டாச்சியர் அறை முன்பு முற்றுகையிட்டு பட்டா வழங்க கோரினார்கள் அப்போது ஜமாபந்தி வேலையாக அங்குவந்த ஆதிதிராவிட நல அலுவலர் சுரேஷ் மற்றும் வட்டாச்சியர் ஜெயபாண்டி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி அதன் பின்னர் நீங்கள் பட்டா கோரி விண்ணப்பங்கள் தரும் பட்சத்தில் நாங்கள் பரிசீலனை செய்கிறோம் என மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ் பதில் கூறினார். இதை கண்டித்து தொடர்ந்து முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனியே மனு கொடுக்க முயன்றனர் அதை அனைத்தையும்வருவாய்த்துறையினர் பெற்றுக்கொண்டனர்

இதனால் வட்டாச்சியர் அலுவலகம் பரப்பானது ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ்
சீமான் எஸ்ஐகள் கமலக்கண்ணன் முருகராஜ் மற்றுமா போலீஸ் படை குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *