மதுரையில் ரூ 24 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மற்றும் நியாய விலைக்கடை கட்டிடங்கள்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்….
மதுரை மாநகராட்சி வார்டு எண் 76 மேலவாசல் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும்,திடீர் நகர் பகுதியில் 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மத்திய மண்டல தலைவர் பாண்டி செல்வி மாமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் பொருட்களின் விநியோகத்தை பார்வையிட்டார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணைப் பதிவாளர் குருமூர்த்தி மற்றும் பாண்டியன் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உடன் இருந்தனர்.