கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.70க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், தேவாங்க மேல்நிலைப்பள்ளி சாலை, சுகாதார ஆய்வாளர் அலுவலக வளாகத்தில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மைப்பணிகளுக்கு ரூ.63.44 இலட்சம் மதிப்பீட்டில், 15726 எண்ணிக்கையிலான தளவாட பொருட்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஷர்மிளா, திருமதி.ரேவதி முரளி, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதா ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.