செங்கத்தில் கஞ்சா கள்ள சாராயம் பறிமுதல் செங்கம் போலீசார் நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பைபாஸ் சாலையில் கஞ்சா மற்றும் கள்ள சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல்
அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செங்கம் காவல் உதவி ஆய்வாளர் நசுருதீன் தலைமையிலான காவல்துறையினர்
தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது சுமார் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 20 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்