ராகுல் காந்தி பிறந்தநாள் விழா ..
கோவையில் சிறுபான்மை பிரிவினர் சார்பாக ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்தியாவின் எதிர்காலம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா கோவை சி.எம்.எஸ். ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முஹம்மது ஹாரூன், குறிச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகமது இஸ்மாயில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் முகமது ஹாரிஸ், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அப்துல்லா அசார், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மதுசூதனன், பொதுச் செயலாளர் V. முருகன் மற்றும் கோவை மாவட்ட சிறுபான்மை துறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..