செங்கல்பட்டு மாவட்டம் மத்திய அரசின் மை கவர்மெண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் கீழ் குடி மக்களுக்கு உதவி கரம் நீட்டும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.
இந்த மை கவர்மெண்ட் திட்டத்தில் பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய அத்தியாவசிய திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் சில பகுதிகளில் பாரத பிரதமர் நரேந்திரமோடி மற்றும் ஜனாதிபதி உச்ச நீதிமன்ற நீதி அரசர்களின் ஆலோசனைப்படி செயல்பட துவங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள மீனவர்களுக்கு மீனவ வலை உள்ளிட்ட உபகரணங்கள், விவசாயிகளுக்கு ஈடுபொருள் வழங்குதல்,சொட்டு நீர் உதவியுடன் சிறு அடர்வணம் உருவாக்குதல், வீடேற்ற ஏழைகளுக்கு வீடு வழங்குதல், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல், நலிந்த பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு நல உதவிகள் வழங்குதல்,கிராம மகளிர் திட்ட பெண்களுக்கு பசுமாடுகள் வழங்குதல்,சிறு குரு உற்பத்தி சேவைக்காகமுத்ரா யோஜனா வங்கி கடன் திட்டம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக அனைத்து மத்திய அமைச்சர்களின் ஆலோசனைப்படி குறிப்பிட்டுள்ள நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச்செயல்பாடு திட்டத்தின் மை கவர்மெண்ட் டீம் வெங்கடாஜலபதி தலைமையில் ரவீந்தர், கார்த்திகேயன், அமுல்ராஜ், ஹரி, முகிலன், அருணா, அம்பிகா, தேவி, செல்வி, ஐஸ்வர்யா, சத்யா, அரவிந்த், பிரபு, உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையாகக் கொண்டு செயல்பட்டு தொடங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.