திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24.06.2024தேதி 1433 பசலி- க்கான ஜமாபந்தி திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் தலைமையில் செங்கம் உள்வட்டத்திற்கு கிராமங்களுக்கு வருவாய் தீர்வாயம் ஜமாமந்தி நடைபெற்றது..
இதில் செங்கம் வட்டத்திற்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களின் கோரிக்கைக்கு மனு கொடுத்து வருகிறார்கள். இதில் சென்னசமுத்திரம் மதுரா தர்பார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் 15 நபர்களுக்கு பட்டா வழங்க கோரி ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனுக்களை வழங்கினார்கள்.
இதனை உடனடியாக பரிசீலனை செய்த ஜமாபந்தி அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்..