2024, ஜூன் 30, ஜூலை 7 தேதிகளில் நடக்க இருக்கும் French பாராளுமன்ற தேர்தலில் நான், கண்ணபிரான் மற்றும் திருமதி ARTHUR FRANÇOISE ம் இணைந்து போட்டியிடுகிறோம். புதுச்சேரி French consulat ல் French வாக்காளர் பட்டியலில் பதிந்துள்ள 4545 பேரும் வாக்களிக்கலாம்.
புதுச்சேரி, காரைக்கால், சென்னை உள்ளவர்களும், இந்தியாவில் மற்ற French Consulat ல் பதிந்துள்ளவர்களும் வாக்களித்து, முதல் முறையாக புதுச்சேரியை சேர்ந்த எங்களை FRENCH M.P ஆக அனுப்புங்கள்.
புதுச்சேரி சுதந்திரம் அடைந்த பிறகு கிடைக்கின்ற நல்ல சந்தர்ப்பம் இது.
FRANCE ன் வெளிநாடு வாழ் French காரர்களுக்கான 11வது தொகுதியில் நாங்கள் போட்டியிடுகிறோம், இதில் 50 நாடுகள் உள்ளன. முழுவிபரமும் எங்கள் FB ல் உள்ளன.
ஜூன் 30ந்தேதி தேர்தலில் 15 பேர்கள் போட்டியிடுகிறோம், முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் மட்டும் ஜூலை 7 ந்தேதி போட்டியிட்டு வெற்றி பெறுவார்கள்.
நீண்ட துார பயணம், பண செலவு, நேர விரயம் ஆகியவற்றை தவிர்க்கவும், வெளியூர் சென்று உள்ளவர்களும், இந்த தேர்தலில், INTERNET மூலம் வாக்களிக்கலாம். இதற்கு CONSULAT வில் ஏற்கனவே உங்கள் போன் நம்பர், EMAIL பதிந்திருக்க வேண்டும். எப்படி INTERNET மூலம் வாக்களிப்பது என எங்கள் FB ல் பார்க்கலாம்.
நாங்கள் வென்றால், புதுச்சேரியில் உள்ள French Nationality காரர்களுக்கு பயனாக இருக்கும், மேலும் புதுச்சேரி அரசுக்கும் French பாராளுமன்றத்திற்கும் பாலமாக இருப்போம். பல நலத்திட்டங்கள் கொண்டு வர வழிவகுக்கும்.
எங்களது சில முயற்சிகளுக்கு French அரசியல் ஆதரவு கிடைக்கவில்லை, அதனால் நாம் France ல் அரசியலில் ஈடுபட வேண்டும்.
நம் புதுச்சேரியை சேர்ந்த மேலும் 4 பேர்கள் M.P பதவிக்காக, France ல் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
1) திருமதி EDWINA MANIKA-TORE (எட்வினா மாணிக்கா – தோரே )
“வால் து வாஸ்” மாவட்டத்தில் 10ம் தொகுதியிலும் 9510.
2) திரு CÉLESTIN CHRISTOPHE (செலஸ்தன் கிரிஸ்தோப்) “வால் து வாஸ்” மாவட்டத்தில் 6ம் தொகுதியிலும் 9506,
3) திரு FAROUK AMIRDINE ( பாரூக் அமிர்தீன்) “சேன் சேந்தெனி” மாவட்டத்தில் 4ம் தொகுதியிலும் 9304,
4) திரு SENDIL DJEARAMANE (செந்தில் ஜெயராமன்) “ஈவ்லின் ” மாவட்டம் 9ம் தொகுதியிலும்
போட்டியிடுகின்றனர்.
அப்பகுதி மக்கள் அவசியம் ஆதரவு தந்து அவர்களுக்கு வாக்களிக்கவும்.
இவர்கள் அனைவரும் தேர்தலில் வெற்றி பெற்று மேன்மேலும் உயர இறைவனை வேண்டுகிறேன்.
நன்றி,
கண்ணபிரான்,