பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20.
திருப்பூர் மாவட்டம் பல்லடம்.
தமிழக கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமாரின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பில் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மத்திய மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் கொடி ஏற்றி நூற்றுக்கு மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.