மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு.

ஜூலை 03-07-24 புது டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை அவரது அலுவலகத்தில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்கள் இன்று நேரில் சந்தித்து நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான ரயில் சார்ந்த கோரிக்கை மனு அளித்தார். மனுவில் உள்ள கோரிக்கைகள்

விவரம்:-
1) திருவாரூர் ரயில் சந்திப்பில் அடிப்படை கட்டமைப்புகள் உள்ளமையினால் அனைத்து ரயில்களுக்குமான முதன்மை பணிமனை அமைக்க வேண்டும்.

2) காரைக்கால்- திருவாரூர்- தஞ்சாவூர் தடத்தினை விரைந்து இரட்டை வழி பாதையாக அமைத்திட வேண்டும்.

3) தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் இதுவரை செய்து முடிக்கப்படாத திருவாரூர்- காரைக்குடி தடத்தை விரைந்து மின்மயம் ஆக்க வேண்டும். மேலும் இந்த தடத்தை இரட்டை வழி பாதையாகவும் மாற்றம் செய்ய வேண்டும்.

4) திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம் பள்ளி பாதையை கோடியக்கரை வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
5) மதுரை- புனலூர்- மதுரை ரயிலை காரைக்கால் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
6) வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம்- செங்கோட்டை- தாம்பரம் அதிவேக விரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும்.
7) திருப்பதி- மன்னார்குடி- திருப்பதி வாரம் மும்முறை ரயிலை தினசரி இயக்கிட வேண்டும்.
8) வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கு திருவாரூர், தஞ்சாவூர் வழியாக இரவு நேரத்தில் ஒரு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

9) யாத்திரிகர்கள் நலன் கருதி அதிகாலையில் வேளாங்கண்ணியில் இருந்து திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

10) காலை 8:15 மணிக்கு திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலையும், மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரயிலையும் அலுவலகம் செல்வோர் நலன் கருதி செங்கல்பட்டு அல்லது குறைந்தபட்சம் விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

11) மருத்துவக் கல்லூரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் மாணவர்கள் நலன் கருதி காலை 6-00 மணிக்கு விழுப்புரத்தில் புறப்பட்ட மயிலாடுதுறை வரும் ரயிலை திருவாரூர் வரை நீட்டிக்க வேண்டும்.

12) அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரி செல்வோர் நலன் கருதி காலையில் காரைக்குடியில் இருந்து ஒரு பயணிகள் ரயில் மன்னார்குடி- மயிலாடுதுறை ரயிலை திருவாரூரில் இணைக்கும் வண்ணம் இயக்க வேண்டும்.

13) அம்ரித் பாரத் திட்டத்தில் நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி ரயில் நிலையங்களை இணைக்க வேண்டும்.

14) அனைத்து ரயில்களுக்கும் கொரடாச்சேரி, கீழ்வேளுர், பேரளம், முத்துப்பேட்டை ஊர்களுக்கு நிறுத்தம் வழங்கிட வேண்டும்.

15) பாம்பன் பால வேலைகள் முடிந்த பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி திருவாரூர் வழியாக வட மாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும்.

16) சென்னையில் இருந்து திருச்சி மார்க்கத்திற்கு மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் வழியாகவும் ஒரு சில ரயில்கள் இயக்க வேண்டும்.

17) பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் இந்தப் பகுதியில் இருந்து சென்னைக்கும், கோவைக்கும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.

18) திருச்சி- திருவாரூர் ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.

19) நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கீழ்பாலம் அமைக்க வேண்டும்.

20) நாகப்பட்டினம்- திருக்குவளை- திருத்துறைப்பூண்டி புதிய பாதை அமைக்கும் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

21) பேரளம்- காரைக்கால் பாதை பணிகள் முடிந்த பிறகு தற்போது திருவாரூர் வழியாக இயங்கும் எந்த ரயிலையும் வழிமாற்றம் செய்யக்கூடாது.

 கோரிக்கைகளை பெற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர்  இயன்றவரை ஆவண செய்வதாக கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *