கோவை விளாங்குறச்சி ஆர்.ஜே.பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி என்.பி.ஹரிணி தேசிய அளவிலான யோகா போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்..
கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்த நிவாஸ்,பிரியா தம்பதியரின் மகள் ஹரிணி.அதே பகுதியில் உள்ள ஆர்.ஜே.பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஹரிணி சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு மாவட்ட,மாநில,தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
இந்நிலையில்,அண்மையில்,உத்தரகாண்ட் மாநிலத்தில்,யுனிவர்சல் யோகா ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் சார்பாக, இந்தியன் நேஷனல் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டி நடைபெற்றது…இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் , சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில், தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்ட இரண்டு பேரில் ஒருவராக கோவை மாணவி என். பி. ஹரிணி கலந்து கொண்டார்.
போட்டியில் கலந்து கொண்ட மாணவி ஹரிணி பல்வேறு ஆசனங்களை அசத்தலாக செய்து தன் திறமையை முழுவதும் வெளிப்படுத்தி முதலிடம் பெற்றார். இந்நிலையில் தமிழக அணி சார்பாக கலந்து கொண்டு கோவைக்கு பெருமை சேர்த்துள்ள ஹரிணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்….