மதுவினால் இளம் விதவைகள் உருவாகின்று என சொன்ன ஆளை தமிழ்நாட்டில் காணவில்லை என்று தெரிவித்தனர்

 கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் கள்ளச்சாராய மரணங்களை தடுக்க திமுக அரசு முன் வர வேண்டும் எனவும்  கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே.சி ராஜா தலைமையில் கோவை மண்டல தலைவர் சுதர்சன் முன்னிலை நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

கள்ளச்சாராயத்தினால் தமிழ்நாட்டில் பல உயிர்கள் பறி போய்விட்டது என்றும் கள்ளச்சாரத்தை குடிக்க ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி வருகிறது.

மது பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து அவர்களை திருத்த வேண்டும் எனவும் மதுவினால் அடிமையாக இருப்பவர்களை பாடம் எடுத்து முழுமையாக சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாகவும் அதனை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *