இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் ரெட்டைமலை சீனிவாசனார் 165 ஆவது பிறந்தநாள் விழா
வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் குடி கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆதி பறையர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சாத்தை இளங்கோவன் தலைமை வகித்தார்.
எஸ்.சி எஸ்.டி. அலுவலர் ஆசிரியர் நலச் சங்க நிறுவனத் தலைவர் கம்பம் க. சுப்பிரமணியன் கிராமத் தலைவர் வழக்கறிஞர் எஸ் கிருஷ்ணமூர்த்தி கிராமப் பொருளாளர் எம். இளையராஜா கிராம துணைச் செயலாளர்கள் பி. கோபால் பாண்டி எம் முருகானந்தம் விசிக ஒன்றிய இணைச் செயலாளர் கே ஆகாஷ் பள்ளி ஆசிரியர் என். கண்ணன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்
கிராமச் செயலாளர் டாக்டர் வேலு திரு முருகன் அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் சத்திரக்குடி பேருந்து நிலையம் அருகில் ரெட்டை மலை சீனிவாசனார் திருவுருவப்படத்திற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
யோகி பாட்டையா அரங்கில் சமூக முக்கிய தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர்கள் கிராம நிர்வாகிகள் மற்றும் ஆதி பறையர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று இனிப்புகள் வழங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயங்கள் வழங்கியும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியின் நிறைவில் எஸ்சி எஸ்டி மாநில ஆசிரியர் நல சங்க நிறுவனத் தலைவர் கம்பம் க. சுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்