தென்காசி, ஜுலை – 09

தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் தியேட்டரில் நடைபெற்ற சாமானியன் திரைப்பட 50 வது நாள் வெற்றி விழாவில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டார்.

ஆலங்குளம்-அம்பை சாலையில் அமைந்துள்ள டி.பி.வி. மல்டிபிளக்ஸ் திரையங்கில் நடிகர் ராமராஜன் 14 ஆண்டுகள் கழித்து நடித்த சாமானியன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்ற இப்படத்தின் 25 நாள் விழாவில் நடிகர்ராமராஜன் கலந்து கொண்டார்.

தற்போது இப்படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 6 மணி காட்சியில் நடிகர் ராமராஜன் இயக்குனர் ராகேஷ் மற்றும் படக்குழுவினர் ரசிகர்கள் முன்பு தோன்றினர்.

முன்னதாக தியேட்டருக்கு வருகை தந்த ராமராஜன் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் உரிமையாளர் டி.பி.வி.கருணாகரராஜா, டி.பி.வி.வைகுண்டராஜா, தொழிலதிபர்கள் விபின் சக்கரவர்த்தி, நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர்வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ராமராஜன், இயக்குனர் ராகேஷ், நடிகர்கள் டெம்பிள் சிட்டிகுமார், ஷியாம், ஒளிப்பதிவாளர் அருள்செல்வன், படத்தொகுப்பாளர் ராம்கோபி மற்றும் படக்குழுவின ருக்கு தியேட்டர் நிர்வாகம் சார்பில் நினைவு பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. பின்னர் 50வது வெற்றி விழாவை கொண்டாடும் வகையில் நடிகர் ராமராஜன் கேக் வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டி விட்டார்.

அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நடிகர் ராமராஜன் பேசியதாவது:-
ஏழை, எளிய சாமானிய மக்களும் தியேட்டரில் படம் பார்க்க வருகை தருவதற்காக டிக்கெட் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென எனது வேண்டுகோளை ஏற்று, டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக குறைத்த டி.பி.வி. மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உலககோப்பையை கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வென்ற போது போது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ, அதே போன்ற மகிழ்ச்சி எனக்கு இங்கு 50வது நாள் வெற்றிக்கான கேடயம் கிடைத்த போது ஏற்பட்டது.

சாமானியன் வெற்றி பெறச்செய்ய ரசிகர்கள் குறிப்பாக கிராமப்புற பெண்களை ஊர், ஊராக சென்று சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறேன்.சினிமா வரலாற்றில் ரசிகர்களை நேரில் அவர்களது ஊருக்கே சென்று நன்றி சொல்வது இது தான் முதன் முறை. தொடர்ந்து படங்கள் நடிக்க உள்ளேள். மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் படங்கள் நடித்தால் நிச்சயம் அப்படம் வெற்றி பெறும். என்றார்.

இயக்குனர் ராகேஷ் பேசுகையில், எனது அடுத்தப்படமும் ராமராஜனை வைத்து தான் இயக்கவுள்ளேன். சாமானியனை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ராமராஜன் ரசிகர் மன்ற தலைவர் சுப்பையா, நேர்முக உதவியாளர்கள் செல்வராஜ், தங்கவேல், பாலமுருகன், தங்கராஜ் மற்றும் திரையங்கு ஊழியர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *