சர்வதேச போதை ஒழிப்பு தினமான
ஜுன் 26 – முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதை ஒழிப்பு என்ற தலைப்பின் கீழ், விழிப்புணர்வு கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் ஜெயங்கொண்டம் காவல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டது.

    இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து பள்ளி மாணக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, கட்டுரை போட்டியில் 641 கட்டுரைகளும், ஓவியப்போட்டியில் 711 ஓவியங்களும் வரைந்தனர்.

 இதில் கட்டுரை போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த, பிரீத்தி அரசு மேல்நிலைப்பள்ளி இலையூர் வாரியங்காவல், அருண் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி அரியலூர், காவியா பாரதமாதா ஆர் சி மேல்நிலைப்பள்ளி நடுவலூர் மற்றும் தாரணி அரசு மேல்நிலைப்பள்ளி உதயநத்தம்,  இதுபோன்று ஓவியப் போட்டியில் சஞ்சய் குமார் அரசு மேல்நிலைப்பள்ளி உடையார்பாளையம், ராகுல் மான்போர்ட் மெட்ரிக் பள்ளி அரியலூர், பாவனா அரசு உயர்நிலைப்பள்ளி சிலால் மற்றும் நிதின்குமார் அரசு நடுநிலைப்பள்ளி வீரபோகம் ஆகியோர்கள் முறையே மூன்று இடங்களை பெற்றனர்.

மேலும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள், 09.07.2024 இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து வெகுமதியும், நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். ஆறுதல் பரிசாக 12 மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சிவகுமார் (தலைமையிடம்) அந்தோணி ஆரி (இணைய குற்றப்பிரிவு) ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர்
ராமராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *