தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பாரத் கல்வியியல் நிறுவனம் சார்பில்
மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்
திட்டம் குறித்த பயிற்சியானது
நடைபெற்றது

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா மாணவ மாணவிகளுக்கான திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.

மாவட்ட சமூக நல அலுவலர் பே.மதிவதனா, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமைபெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், திருமண உதவித் தொகை திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார்.

காவல் ஆய்வாளர்
லெட்சுமி பிரபா,பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு, பெண்களுக்கான சட்டங்கள் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை
தடுப்பு சட்டம், பணிபுரியுமிடங்களில் பெண்களுக் கெதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்கள்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எல்பிஒ அருண்குமார் குழந்தைகளுக்கான உதவி எண்கள், சட்டம் மற்றும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.

ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி
ஜெ.ஜெயராணி, சேவை மைய செயல்பாடுகள் மற்றும் பெண்கள் உதவி எண் 181 பற்றி விரிவாக பேசினார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,ஜெ.புஸ்பராஜ்
மகளிர் அதிகார மையம் திட்ட செயல்பாடுகள் குறித்தும் மற்றும் பெண்களுக்கான திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதில் 80-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *