திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த மதியூர் என்கின்ற பெரிய மடியூர் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் ஈஸ்வரர் திருக்கோயில் 3ஆம் ஆண்டு பூர்த்தி வைபவம் மற்றும் காரிய சித்தி விநாயகர் பிரதிஷ்டை விழா வெகு விமர்சையாக நடைபெற் றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த மதியூர் என்கின்ற பெரிய மடியூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுயம்பு வேம்பு காசி விஸ்வநாதே ஷ்வரர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு பூர்த்தி வைபவம் மற்றும் காரிய சித்தி விநாயகர் பிரதிஷ்டை விழா நேற்று காலை 9 மணிக்கு மேல் நடைபெற்றது.

முன்னதாக காலை 6 மணிக்கு கோ பூஜை மற்றும் கணபதி ஹோமம் 9.30 மணிக்கு காரிய சித்தி விநாயகர் பிரதிஷ்டை 11 மணி அளவில் 108 சங்க அபிஷேகம் விசேஷ திரவிய அபிஷேகம் மற்றும் அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்று 12:30 மணிக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னதாக பெண்கள் சுவாமிக்கு சீர்வரிசைப் பொருட்களை கொண்டு வந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் வி ஆர் பகவான், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில், பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர், அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ விமான சிறுனியம் பி பலராமன், முன்னாள் எம்எல்ஏ எச் ராஜா, இந்துக்களின் முதல்வர் தமிழ் திரு அர்ஜுன் சம்பத், பாலசுப்ரமணி யன், இராம நிரஞ்சன், டாக்டர் ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, அழிஞ்சிவாக்கம் முன்னாள் தலைவர் எம் பாஸ்கரன், ஆர் எம் ஆர் ஜானகிராமன், சோழவரம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஒன்றிய கவு ன்சிலர் பானு பிரசாத், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகே ஷ், மீஞ்சூர் பெருமாள், வேணு, சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வ சேகரன், வழுதிகைமேடு ஊராட்சி மன்ற தலைவர் சுடர் விழி தனசேகரன், துணைத் தலைவர் சந்திரபாபு, கவுன்சிலர் துரைவேல் பாண்டியன், கார்த்திக் சிவம், அண்ணாமலை சித்தர், சோமு ராஜசேகரன், பிரகாஷ் ஐயா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட தாக கோவில் நிர்வாகிகள் தெரிவி த்தனர்.

இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளான கே ஆர் ஸ்ரீதர், கே ராமமூர்த்தி,கே பாஸ்கர், கே ரமேஷ் குமார், ஜி டி வெங்கடே ஷ் பாபு, ஜி ரூப் குமார், கே ஜி கோபி, மற்றும் மதியூர் என்கின்ற பெரிய மடியூர் வாழ் கிராம பொது மக்கள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக் தர்கள் கலந்து கொண்டு சுவாமி யை வழிபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *