விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் போலிசார் சகிதம் அரசால் தடைசெய்யப்பட்ட போதை பொருள் சம்பந்தமாக ரோந்து சென்றபோது ரெங்கநாதபுரம் பாறை அரசு பள்ளி அருகில் மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்த இருவர் போலிசாரை கண்டு அங்கிருந்து நழுவியதை கண்ட போலிசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது
செட்டியார்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் முனீஸ்வரன்(23) தளவாய்புரத்தை சேர்ந்த வன்னியரசு மகன் மோகனகிருஷ்ணன் ஆகியோர் என தெரியவந்தது

மேலும் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 120 கிராம் கஞ்சா மற்றும் 11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து இருவரும் கைது செய்யப்பட்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *