கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2026 ஆம் ஆண்டிற்கான எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ பட்டபடிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்றது.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் டி.ஆர்.கே.சரசுவதி,மற்றும் நிர்வாகச் செயலர் டாக்டர்.கே.பிரியா,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர். பொன்னுசாமி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில்,இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எம்.பி.ஏ., இயக்குனர் டாக்டர்.சுதாகர்,அனைவரையும் வரவேற்று பேசினார்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, மார்க் ஒன் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் சேஷாத்ரி,ரீனைசன்ஸ் ஈவென்ட்ஸ் இயக்குனர் ராகினி, ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் விசா நிறுவனத்தின் இன்ஜினியர் கோகுலன்,ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினர்.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில்,எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படிப்புகளை துவக்கும் மாணவர்கள், திட்டமிடல், ஒழுங்கமைத்தல், தலைமைத்துவம் மற்றும் தொடர்பு போன்ற பொதுவான மேலாண்மை திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என பேசினர்..
மேலும் கல்வி கற்கும் மாணவர்கள் தரவுத்தள நிர்வாகம், நெட்வொர்க்கிங் மற்றும் தகவல் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப திறன்களை வளர்த்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
முன்னதாக,
நிகழ்ச்சியில் மார்க் ஒன் ஈவென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி இணைந்து புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில்,மேலாண்மை சார்ந்த படிப்புகளில் ஈவென்ட்ஸ் மேனேஜ்மெண்ட் குறித்த புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
விழாவில்,கல்லூரியின் நிர்வாக அலுவலர் சிவசங்கர்,அட்மிசன் இயக்குனர் டாக்டர் ஜெயலட்சுமி, எம்.சி.ஏ. இயக்குனர் செந்தில் குமார் உட்பட மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..