சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.பி.ஜெயசீலன் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன்., முன்னிலை வகித்து பேசினர்
அதனைத்தொடர்ந்து தலைமை உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அனைத்து துறையிலுள்ள திட்டங்களை பொதுமக்கள் அறிந்து அதனை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனவும் இராஜபாளையம் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும் வேளாண்மைத்துறை சார்ந்த பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி தொகுதியின் வளர்ச்சி பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
இம்முகாமில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிளான பட்டா வழங்குதல் விவசாய பண்ணை கருவிகள் வழங்குதல் மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்குதல் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கைபேசி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மற்றும் எம்பி . எம்எல்ஏ அவர்களும் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் சார் ஆட்சியர் அனிதா வட்டாட்சியர் ஜெயபாண்டி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கிளைச்செயலாளர் சின்னதம்பி தங்கப்பன் சீதாராமன் தொந்தியப்பன் வைரவன் அனைத்து துறை அலுவலர்கள் பயனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.