கோவில்பட்டி அருகே விவசாயம் செழிக்க கோ சாலையில் சிறப்பு வழிபாடு
11 ஏழை விவசாயிகளுக்கு பசுமாடுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி செண்பகா நகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாலகோபால கோசாலை டிரஸ்ட் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செழிக்க வலியுறுத்தி சிறப்பு பூஜைகள் மற்றும் ஏழை,எளிய விசாயிகளுக்கு பசுமாடுகள் தானமாக (இலவசமாக) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்தாண்டுக்கான நிகழ்ச்சி இன்று ஸ்ரீ பாலகோபால கோசாலையில் நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் கோ சாலையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 11 விவசாயிகளுக்கு இலவசமாக பசுமாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ பாலகோபால கோசாலை டிரஸ்ட் நிர்வாகி சீதாராமசர்மா விவசாயிகளுக்கு இலவசமாக பசுமாடுகளை வழங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் ஸ்ரீ பாலகோபால கோசாலை டிரஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்