விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தாலுகா, செட்டியார்பட்டி – முகவூர் – சேத்தூர் சாலையில் கடந்த 2019ம் ஆண்டு முதல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் அடிக்கடி பல இடங்களில் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதுடன் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் சாலைகளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியரும் மற்றும் வாகனங்களும் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை உண்டாகிறது.
இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை தொடர்ந்து மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜனதா பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக் குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் அ. மணிகண்டன், பொ. கோபால், மா.கருப்பசாமி நீராத்திலிங்கம், ஜெயக்குமார், சரவணன் த.அய்யனார், மணிவண்ணன், க.வீரபாகு உள்ளிட்ட வட்டார சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்