தஞ்சாவூர் அருகே உள்ள தென்பரம்பூர் கிராமத்தில், நீர்வளத் துறை வெண்ணாறு வடிநில கோட்டத்தின் கீழ் இயங்கும் தென்பரம்பூர் பாசன பிரிவில் உள்ள தடுப்பனையில் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று முறை உடைப்படுத்து பெரும் சேதம் அடைந்தது.

           பின்னர் தடுப்பனையை பார்வையிட்ட மண்டல தலைமை பொறியாளர்-CE, கண்காணிப்பு பொறியாளர் SE ஆகியவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அதை சரி செய்வதற்கு ஒரு கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளார்கள்.

        ஆனால் இன்று வரை தடுப்பணை சீரமைப்பதற்கான எந்த ஒரு வேலையையும் தொடங்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் வெண்ணாறு பாசன விவசாயத்திற்கு கல்லணையில் இருந்து   தண்ணீர் திறந்து விடப்பட்டால் அந்தத் தண்ணீர் முதலில் இந்த தென்பரம்பூர் தடுப்பணைக்கு தான் வந்து சேரும். அதனால் தென்பரம்பூர் தடுப்பணை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்த வருடம் கல்லணையில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போது தடுப்பணைக்கி ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனால்  பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக  உடனடியாக இந்த தடுப்பணை வேலை திட்டத்தினை தொடங்கி சரி செய்து கொடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *