தென்காசி, ஜூலை 10..
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலும் மாணவன் மாதவன் 100 யோகாசனத்துடன் 100 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார் ,.இந்த சாதனையை வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேசன் நிறுவனர் .ஆனந்தன் அய்யாசாமி நேரில் வாழ்த்தி பாராட்டினார்.
இந்நிகழச்சியில் ராஜகோபாலபேரி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ண ஜெயந்தி,ஒன்றிய கவுன்சிலர் நான்சி டோமினிக் ராஜா,ஊராட்சி செயலர் நவநீதகிருஷ்ணன் , முன்னாள் ராணுவ வீரர் இராமசுப்பிரமணியன், என்.எப்.எஸ். அறக்கட்டளை நிர்வாகிகள், அக்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகிகள், கலாமின் கனவுகள் நிர்வாகிகள் ,பீனிக்ஸ் யோகா பயிற்சி மையம் மாஸ்டர் மருதுபாண்டி ,ரேவதி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.