சின்னமனூர் அருகே மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா வழங்கினார்.

இந்த மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று 118 பயனாளிகளுக்கு 2.71 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

இதனை தொடர்ந்து 288 நபர்களுக்கு இணையவழி பதிவு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன இந்த முகாமில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி குணசேகரன் துணைத் தலைவர் என் சரிதா ஊராட்சி செயலாளர் ஞானசேகரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *