அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாரைபட்டி, சரந்தாங்கி, வெள்ளையம்பட்டி, பெரியகுளம், மாணிக்கம்பட்டி ஆகிய ஐந்து ஊர் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட ஶ்ரீஅய்யனார் சுவாமி குதிரை எடுப்பு திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சுவாமிக்கு பிடி மண் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் பெரியகுளம், கொசவன்குளம் கண்மயிலிருந்து சுவாமி ஆட்டதுடன் பிடி மண் எடுத்து வந்து ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
பின்னர் பிடி மண் ஊர்வலமாக கொண்டு சென்று பெரியகுளம் வேளாரிடம் குதிரை, அய்யனார், கருப்பசாமி, சின்னகருப்புசாமி, கன்னிமார், தங்கச்சி அம்மன், பூதம் உள்ளிட்ட சிலைகள் செய்ய பிடி மண் கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து திருவிழா தேதி பொதுமக்கள் முன்னிலையில் அறிவித்தனர். கடந்த 35 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த திருவிழாவில் ஐந்து ஊர் கிராம மக்கள் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஐந்து ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.