தென்காசி மாவட்டம் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியத்தின் மூலம் தமிழக அரசின் மீண்டும் மஞ்சள் பை திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விஜிலா நேசமணி வரவேற்றார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் தலைமை தாங்கி மஞ்சள் மாணவிகளுக்கு வழங்கினார்.

முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு தோழர் பவானி நிகழ்வின் நோக்கம் குறித்து பேசினார்.

மேற்கு மலை தொடர்சியின் வனவளம் குறித்தும் வனம் மற்றும் வனவிலங்குகள் எப்படி பிளாஸ்டிக் கினால் எவ்வாறு பாதிக்கபடுகிறது என்பது குறித்தும் இயற்கை ஆர்வலர் இளங்கோ பேசினார்.

இயற்கை விவசாயமும் சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் இயற்கை விவசாயி ஆறுமுகம் பேசினார் பின்னர் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீய விளைவுகள் குறித்து தன்னார்வலர்களின் விழிப்புணர்வுகலை நிகழ்வு நடைபெற்து

இதில் . மாவட்ட சுற்றுசூழல் உதவி பொறியாளர் தமிழ்செல்வன். உதவியாளர்கள் முத்து சங்கர், சத்யா தன்னார்வலர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தங்கதுரைச்சி, சேர்மகனி, ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *